அபே ஜன பல கட்சியிலிருந்து ரதன தேரர் நீக்கப்பட்டிருப்பதாக அக்கட்சி சார்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தாம் அந்தக் கட்சியின் உறுப்பினரே இல்லையென தெரிவிக்கிறார் ரதன தேரர்.
கட்சியில் இல்லாத தன்னை எவ்வாறு நீக்க முடியும்? என கேள்வியெழுப்பியுள்ள அவர், தாம் அக்கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டதாக விளக்கமளித்துள்ளார். ஆதலால், கட்சி முடிவு தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை எந்த வகையிலும் பாதிக்காது எனவும் அவர் தெரிவிக்கிறார்.
இதேவேளை, ரதன தேரருக்கு பதிலாக ஞானசார தேரர் நாடாளுமன்றுக்குள் நுழைவார் எனும் 'அவசர' செய்திகள் வெகுவாகப் பரவி பேசு பொருளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment