சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: பிரசன்ன குஷி! - sonakar.com

Post Top Ad

Sunday, 17 October 2021

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: பிரசன்ன குஷி!

 


கொரோனா சூழ்நிலையில்  வீழ்ச்சியடைந்திருந்த இலங்கையின் சுற்றுலாத்துறை மீளவும் வளர்ச்சி பெறுவதாக மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க.


இம்மாதத்தின் முதல் இரு வாரங்களில் 7000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார். எனினும், கொரோனா கெடுபிடிகளால் தமது வழமையான இலங்கை விஜயத்தை தள்ளிப் போட்டிருந்த வெளிநாடு வாழ் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர்களே பெரும்பாலும் தற்சமயம் வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


விசா வழங்கலில் இருந்த கெடுபிடிகள் மற்றும் குழப்பங்கள் நீங்கியுள்ள நிலையில் வெளிநாடுகளில் வாழும் , வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருக்கும் இலங்கையர்கள் பெருமளவு நாடு திரும்புகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment