புதிய கூட்டணியுடன் SLFP புதிய பயணம்: தயாசிறி - sonakar.com

Post Top Ad

Monday 18 October 2021

புதிய கூட்டணியுடன் SLFP புதிய பயணம்: தயாசிறி

 புதிய அரசியல் கூட்டணியமைத்து புதிய பாதையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பயணிக்கப் போவதாக தெரிவிக்கிறார் அக்கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர.


பெரமுன அரசில் மாற்றான் மனப்பான்மையுடன் சுதந்திரக் கட்சியினர் புறக்கணிக்கப்பட்டு வருவதோடு அரசின் பல நடவடிக்கைகள் தொடர்பில் சுதந்திரக் கட்சியினர் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.


தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் மக்கள் முன் செல்ல முடியாத அளவு சூழ்நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கும் அவர், புதிய அரசியல் பயணம் தவிர்க்க முடியாதது என்கிறார்.

No comments:

Post a Comment