விவசாயத்துறை அமைச்சர் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவின் கடுங் கோபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விவசாயிகள் அரசின் மீது அதிருப்தியடைந்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளதோடு அமைச்சர் மஹிந்தானந்தவின் உருவ பொம்மையையும் எரித்திருந்தனர்.
இந்நிலையில், இரசாயன உர விவகாரத்தை சர்ச்சையாக்கிய பழி மஹிந்தானந்த மீது சுமத்தப்பட்டிருப்பதுடன் அமைச்சுப் பொறுப்பை சரியாகச் செய்ய முடியாவிடின் விட்டு விட்டுச் செல்லுமாறு ஜனாதிபதி எச்சரித்துள்ளதாக அரசின் உத்தியோகபற்றற்ற ஊடகமாக செயற்படும் தெரண செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment