ஜனாதிபதியின் பொது மன்னிப்பினால் விடுதலையான மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வா, தான் எதிர்காலத்தில் அரசியலுக்கு மீள வருவது தொடர்பில் இன்னும் முடிவெடுக்கவில்லையெனவும் அதில் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.
தனது திறமையான ஆளுமைக்கு மதிப்பளித்தே பிரதமர் தனக்கு வீடமைப்பு அதிகார சபை பிரதானியாக பதவி வழங்கியிருப்பதாகவும் எனினும் நேரடி அரசியல் குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லையெனவும் அவர் தெரிவிக்கிறார்.
சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதுமே துமிந்தவுக்கு அரசாங்கத்தில் உயர் பதவி வழங்கப்பட்டிருந்தமையும் மாகாண சபைத் தேர்தலில் அவரை முதலமைச்சர் வேட்பாளராக்குவது தொடர்பில் பெரமுனவினர் தகவல் வெளியிட்டு வந்தமையும் நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment