பேராசிரியரை பதவி நீக்கிய மஹிந்தானந்த! - sonakar.com

Post Top Ad

Tuesday 26 October 2021

பேராசிரியரை பதவி நீக்கிய மஹிந்தானந்த!

 


விவசாயத்துறை அமைச்சின் ஆலோசகராக பணியாற்றிய நீண்டகாலம் விவசாய விஞ்ஞானத்துறையில் அனுபவமும் கல்வியயலாளராகவும் செயற்பட்டு வந்த பேராசிரிய புத்தி மாரம்பே மஹிந்தானந்தவின் கட்டளைக்கிணங்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


அமைச்சு சார்பில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து பொறுப்புகளையும் மீளப் பெற்றுள்ளதாக அமைச்சரின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அரசின் உயர் பதவிகளை வகித்த பல புத்திஜீவிகள் அமைச்சர்களோடு முரண்பட்டு பதவி விலகி வருவதன் தொடர்ச்சியில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment