ஆட்சியின் பங்காளிகளாக இருந்து கொண்டு அரசுக்கு எதிராக செயற்பட்டு வரும் விமல் - கம்மன்பில - வாசு கூட்டணியினர் ஒத்துழைக்க முடியாவிட்டால் வெளியேறலாம் என தெரிவிக்கிறது பெரமுன.
எனினும், தாம் பிழையெனக் கண்டதற்கு எதிராகவே குரல் கொடுப்பதாக விமல் தரப்பு தெரிவிக்கிறது.
நாடாளுமன்றம் சட்ட சபையாக இருக்கும் போது, வெளியிலிருந்து சட்டங்கள் இயற்றப்படுவதாக சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்திருந்த அதேவேளை, அமைச்சரவையிலும் பத்திரங்கள் காட்டப்படுகிறதே தவிர முடிவுகள் அவற்றை வாசிப்பதற்கு முன்பதாகவே அறிவிக்கப்படுவதாக விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார்.
கெரவலபிட்டிய மின் நிலைய விவகாரத்தின் பின்னணியில் விமல் தரப்பு எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தயாராகி வருவதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment