ஞானசார தலைமையில் ஒரே நாடு - ஒரே சட்டம்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 27 October 2021

ஞானசார தலைமையில் ஒரே நாடு - ஒரே சட்டம்!

 


பொதுபல சேன தீவிரவாத அமைப்பை தோற்றுவித்து, அதனூடாக 2014ம் ஆண்டு அளுத்கம வன்முறையைத் தூண்டி, நீதிமன்ற அவமதிப்பின் கீழ் சிறைப்படுத்தவும் பட்ட பின்னணி கொண்ட கலகொட அத்தே ஞானசார தலைமையில் ஜனாதிபதியின் ஒரே நாடு - ஒரே சட்டத்துக்கான வரைபை உருவாக்கும் செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.


இக்குழுவில் நான்கு முஸ்லிம்களும் உள்ளடக்கப்பட்டுள்ள அதேவேளை, நாட்டின் எந்தவொரு குடிமகனுக்கும் சட்டத்தில் விசேட சலுகைகள் இருக்காத வகையில் பொது நிலையை உருவாக்குவதன் அடிப்படையில் வரைபு தயாரிக்கப்படும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


சட்ட வரைபினை முன் வைப்பதோடு அதனை அமுல்படுத்துவது தொடர்பிலும் இக்குழு ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment