நாட்டுக்குள் வரும் மற்றும் நாட்டை விட்டு வெளியேறுபவர்களுக்கான மூன்று மணி நேர பி.சி.ஆர் பரிசோதனையை நடாத்தும் வசதியை வழங்க, கட்டுநாயக்க விமான நிலையம் அருகே நிர்மாணிக்கப்பட்ட பரிசோதனை கூடம் இன்று முதல் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது.
ஒரு மணித்தியாலத்தில் 500 பேருக்கான பரிசோதனையை இங்கு நடாத்த முடியும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 40 அமெரிக்க டொலர் கட்டண அறவீட்டில் இங்கு பி.சி.ஆர் பரிசோதனையை செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தற்சமயம் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றவர்கள் நாட்டுக்குள் வரும் போது தாம் புறப்படும் நாட்டிலிருந்து 72 மணி நேரத்துக்குள் பி.சி.ஆர் பரிசோதனை செய்து கொரோனா தொற்றில்லை என்பதற்கான சான்றோடு தரையிறங்கலாம். குறிப்பிட்ட சில நாடுகளில் தொடர்ந்தும் காணப்படும் நியதியின் பின்னணியிலிருந்து இலங்கையிலிருந்து வெளியேறும் போது பி.சி.ஆர் பரிசோதனை தேவைப்படுவதால் அதனை விமான நிலையத்திலும் செய்து கொள்ளக் கூடியதாக இருக்கும் எனவும் அவ்வாறு தேவைப்படுபவர்கள் நான்கு மணி நேரத்துக்கு முன்பாக வர வேண்டும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment