அமைச்சரவையா இது? விமல் கடும் விசனம்! - sonakar.com

Post Top Ad

Thursday, 14 October 2021

அமைச்சரவையா இது? விமல் கடும் விசனம்!

 


அமைச்சரவைப் பத்திரம் என்கிற பெயரில் பேப்பர்களை தருகிறார்கள், அதை வாசிப்பதற்கு முன்னதாகவே நிறைவேற்றப்பட்டு விட்டதாக அறிவிக்கிறார்கள் என அமைச்சரவை தொடர்பில் விசனம் வெளியிட்டுள்ளார் அமைச்சர் விமல் வீரவன்ச.


அமைச்சுகள் தொடர்பிலான விடயங்கள் எதையும் கலந்துரையாட முன்னதாகவே அது நிறைவேற்றப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்படுவதானது முன் கூட்டியே முடிவுகள் எடுக்கப்படுவதையும் சம்பிரதாயத்துக்காக அமைச்சரவைப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படுவதையுமே எடுத்துக் காட்டுவதாகவும் இருக்கிறது என அவர் தெரிவிக்கிறார்.


இது தொடர்பில் தாம் அமைச்சரவைக்குள் பேசியும் பலனில்லாமல் போயுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment