கஷ்டங்களுக்கெல்லாம் கொரோனா தான் காரணம்: நாமல் - sonakar.com

Post Top Ad

Thursday 14 October 2021

கஷ்டங்களுக்கெல்லாம் கொரோனா தான் காரணம்: நாமல்

 


தற்போது நாடும் நாட்டு மக்களும் அனுபவித்து வரும் கஷ்டங்களுக்கெல்லாம் கொரோனா தான் காரணம் என விளக்கமளித்துள்ளார் அமைச்சர் நாமல் ராஜபக்ச.


புது வருடம் பிறக்கும் போது எல்லா கஷ்டங்களும் நீங்கி நாடு மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்லும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் அவர், திருக்கோவில் பகுதியில் இடம்பெற்ற விளையாட்டரங்கு திறப்பு நிகழ்வின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார். எனினும், அரசின் முகாமைத்துவ குழறுபடியினாலேயே நாடு இந்நிலையை எதிர் நோக்குவதாக எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment