வரிசையில் நிற்பதைத் தவிர்க்கவே விலை அதிகரிப்பு! - sonakar.com

Post Top Ad

Monday 11 October 2021

வரிசையில் நிற்பதைத் தவிர்க்கவே விலை அதிகரிப்பு!

 


நாட்டின் சகல இடங்களிலும் பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் வரிசையில் நிற்கும் காட்சிகளை இல்லாதொழிக்கவே விலை அதிகரிப்பு தேவைப்பட்டதாக விளக்கமளித்துள்ளார் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன.


விலை அதிகரித்தாலும் மக்கள் வரிசையில் காத்திருப்பதைத் தவிர்ப்தே சிறந்தது என முடிவெடுத்ததே விலை அதிகரிப்புகளுக்கான காரணம் எனவும் இல்லாவிடின் வழமையான விலையை நம்பி மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதாகவும் தனது 'அக்கறையை' அவர் வெளியிட்டுள்ளார்.


இதேவேளை, இவ்வாறு வரிசைகள் அதிகரிப்பது எதிர்க்கட்சிகளுக்கு தேவைப்படுவவதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment