2022ம் ஆண்டுக்கான அரசின் வரவு செலவுத் திட்டம் எதிர்பார்த்தபடி நவம்பர் 12ம் திகதி நிதியமைச்சரினால் முன் வைக்கப்படவுள்ளது.
இந்நிலையில் வரவு - செலவுத் திட்டத்தின் மீதான விவாதம் அன்றை தினம் முதல் 22ம் திகதி வரை இடம்பெறும் எனவும் 23ம் திகதி முதல் ஆரம்பமாகும் குழு நிலை விவாதம் டிசம்பர் 10ம் திகதி மூன்றாம் வாசிப்புடன் நிறைவுறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பசில் ராஜபக்ச நிதியமைச்சரானவுடன் நாடு செழிக்கும் என அவரை ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்து வந்த நிலையில் தற்போது பொருட்களின் விலைகள் வெகுவாக உயர்ந்துள்ளன. இப்பின்னணியில் பசிலின் கன்னி பட்ஜட் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment