ஜனாதிபதி 'தனியாக' முடிவெடுக்கக் கூடாது: விமல் - sonakar.com

Post Top Ad

Sunday, 10 October 2021

ஜனாதிபதி 'தனியாக' முடிவெடுக்கக் கூடாது: விமல்

 


எந்தவொரு முடிவையும் அவசரமாகவும் தனியாகவும் எடுக்காமல் அமைச்சரவையில் கலந்துரையாடி முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதிக்கு அறிவுரை வழங்கியுள்ளார் விமல் வீரவன்ச.


அமைச்சரவையில் விமல் வீரவன்ச ஜனாதிபதிக்கு எதிராகப் பேசியதாக வெளியாகி வரும் தகவல்கள் தொடர்பிலேயே அவர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி தனது பதவிக்குரிய பொறுப்புகளில் முறையாக இயங்கினாலேயே பல பிரச்சினைகளை இலகுவாக தீர்த்து விட முடியும் எனவும் அவர் தெரிவிக்கிறார்.


ஜனாதிபதியை சூழவுள்ள வேறு நபர்களால் நாட்டின் நிர்வாக நடவடிக்கைகள் பாரிய குழப்பத்துக்குள்ளாக்கப்பட்டு வருவதாக விமல் தரப்பு தொடர்ந்தும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment