கராபிட்டி போதனா வைத்தியசாலையில் கரும்பூஞ்சையினால் பாதிக்கப்பட்ட ஒருவர் மரணித்ததாக வெளியான தகவல்களை வைத்தியசாலை நிர்வாகம் மறுத்துள்ளது.
செப்டம்பர் 26ம் திகதி இடம்பெற்ற மரணத்தின் பரிசோதனை அறிக்கை வெளியானதன் பின்னணியில் மரணத்துக்கான காரணம் கரும்பூஞ்சை என பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததன் பின்னணியில் இவ்வாறு தகவல் வெளியாகியிருந்தது.
எனினும், அது தவறானது எனவும் உண்மையில்லையெனவும் வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் ஷெல்டன் பெரேரா தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment