அரிசி - பருப்பு விலைகள் பார்க்க நான் தேவையில்லை: ஜனாதிபதி - sonakar.com

Post Top Ad

Saturday 23 October 2021

அரிசி - பருப்பு விலைகள் பார்க்க நான் தேவையில்லை: ஜனாதிபதி

 


நாட்டில் பாரிய மாற்றம் ஒன்றை உருவாக்குவதற்கே மக்கள் தனக்கு வாக்களித்து ஜனாதிபதியாக்கியிருப்பதாகவும் அரிசி - பருப்பு விலைகளை பார்த்துக் கொண்டிருப்பதற்காக அல்ல எனவும் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.


நாட்டின் பொருளாதாரம் பாரிய அளவில் வீழ்ச்சி கண்டுள்ள அதேவேளை அத்தியாவசிய பொருட்களின் விலைகள் வெகுவாக உயர்ந்துள்ளன. இதேவேளை விவசாயிகள் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருகின்ற பின்னணியில் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்நிலையில், இயற்கை விவசாய பண்ணையொன்றுக்கு விஜயம் செய்த அவர், இதற்கு முன் எந்த தலைவரும் இவ்விடயத்தை பலப்படுத்தி முன்னேற்றுவதற்கு கூடிய கவனம் எடுக்கவில்லையெனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment