விலை அதிகரிப்பு: பி.சபை உறுப்பினர் நூதன போராட்டம் - sonakar.com

Post Top Ad

Saturday, 23 October 2021

விலை அதிகரிப்பு: பி.சபை உறுப்பினர் நூதன போராட்டம்

 

அத்தியாவசிய பொருட்களின் விலையதிகரிப்பை எதிர்த்து பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் நூதனமாக தனது கண்டனத்தை வெளியிட்ட சம்பவம் நேற்று முன் தினம் கரைச்சி பிரதேச சபையில் இடம்பெற்றுள்ளது.


குறித்த பிரதேச சபையின் உறுப்பினரான ஜீவராஜா சண்முகராஜா, எரிவாயு சிலிண்டர்கள், சீமெந்து, பால்மா உட்பட்ட பொருட்களை சுமந்து சென்று இக்கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளார்.


அத்துடன், விலையேற்றத்தினால் மக்கள் அவதியுறுவதை சுட்டிக்காட்டி அரசின் இயலாமையை அவர் கடுமையாக சாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment