இலங்கையில் எண்ணை வள அபிவிருத்தியின் பின்னணியில் ஒமானிடமிருந்து 3.6 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு தேவையான 500 மில்லியன் அமெரிக்க டொலரைப் பெறுவதற்கு பல நாடுகளிடம் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு வந்த நிலையில் மன்னாரில் இருப்பதாகக் கூறப்படும் எண்ணை வளத்தை உபயோகித்தால் நாட்டின் அனைத்து கடன்களையும் தீர்த்து விடலாம் என உதய கம்மன்பில தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், ஒமானிடம் நீண்ட கால அடிப்படையிலான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் இரு வாரங்களுக்குள் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment