பூண்டு ஊழல் விவகாரத்தின் தகவல்களை வெளியிட்டதன் பின்னணியில் செய்தி நிறுவனங்களின் எடிட்டர்கள் மற்றும் செய்தியாளர்களை சி.ஐ.டியினர் விசாரிக்க முற்பட்டிருந்தனர்.
எனினும், அவ்வாறு செய்ய வேண்டாம் என பிரதமர் இதில் தலையிட்டு கட்டளை பிறப்பித்திருந்தார். அதனை பொதுமக்கள் பாதுகாப்புக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர ஊடகங்களுக்கும் அறிவித்திருந்தார்.
இருந்த போதிலும், குறித்த நபர்களை சி.ஐ.டிக்கு அழைத்து விசாரிப்பதற்கான நடவடிக்கைகளை திரைமறைவில் சி.ஐ.டியினர் மேற்கொண்டுள்ளமை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளதையடுத்து சி.ஐ.டியை விசாரிக்குமாறு சரத் வீரசேகர பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment