ரஞ்சனை விடுவிக்கும் 'யோசனை' எதுவும் இல்லை: லொஹான் - sonakar.com

Post Top Ad

Tuesday 14 September 2021

ரஞ்சனை விடுவிக்கும் 'யோசனை' எதுவும் இல்லை: லொஹான்

 


ரஞ்சன் ராமநாயக்கவை விடுவிப்பதற்கான எந்தவிதமான கலந்துரையாடலும் இடம்பெறவில்லையென தெரிவிக்கிறார் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த.


நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் சிறைப்படுத்தப்பட்டுள்ள ரஞ்சனை பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்குமாறு எதிர்க்கட்சி பல தடவைகள் கோரிக்கை விடுத்துள்ள அதேவேளை கடந்த வார இறுதியில் ரஞ்சனின் விடுதலையை எதிர்ப்பார்ப்பதாகவும் சஜித் தெரிவித்திருந்தார்.


எனினும், அவ்வாறு எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லையெனவும் ஜனாதிபதி இது பற்றித் தன்னுடன் எதுவும் பேசவில்லையெவும் லொஹான் தெரிவிக்கிறார்.

No comments:

Post a Comment