அ'புர சிறைச்சாலையிலும் அமைச்சர் அடாவடி! - sonakar.com

Post Top Ad

Tuesday 14 September 2021

அ'புர சிறைச்சாலையிலும் அமைச்சர் அடாவடி!

 


கொழும்பிலிருந்து ஹெலிகப்டரில் சென்று, அநுராதபுர சிறைச்சாலை கைதிகள் சிலரை முழந்தாழிட வைத்து, தலையில் துப்பாக்கியை வைத்து அமைச்சர் ஒருவர் கைதிகளை மிரட்டிய சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கிறார் சமகி ஜனபல வேகய நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார.


வெலிகட சிறைச்சாலைக்குள் குடிபோதையில் தமது நண்பர்களுடன் சென்று இராஜாங்க அமைச்சர் ஒருவர் அத்துமீறலில் ஈடுபட்டதையும் சிறைச்சாலை நிர்வாகம் தொடர்ந்து மறுத்து வருகிறது. எனினும், லொஹான் ரத்வத்தவே அவ்வாறு நடந்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது.


இந்நிலையில், அதிகார துஷ்பிரயோகத்துக்கு வெகுவாக பழக்கப்பட்ட அமைச்சர் ஒருவர் இவ்வாறு அநுராதபுர சிறைச்சாலைக்குள் அடாவடியில் ஈடுபட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

No comments:

Post a Comment