தனக்கு மேலதிகமாக பருப்பு தரும்படி கேட்டு, அதற்று இணங்க மறுத்த சதொச முகாமையாளரை ஆளுங்கட்சியான பொதுஜன பெரமுன நகர சபை உறுப்பினர் ஒருவர் தாக்கிய சம்பவம் ஹற்றனில் இடம்பெற்றுள்ளது.
ஒருவருக்கு ஒரு கிலோ கிராம் பருப்பே வழங்க முடியும் என தமக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக ஊழியர்கள் தெரிவித்த போதிலும் அதிகமாக கேட்டு அடம் பிடித்த குறித்த நபர், அங்கு ஏற்பட்ட சலசலப்பைத் தணிக்க வந்த முகாமையாளரையும் தாக்கி, கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரியையும் தாக்கியுள்ளார்.
இந்நிலையில், குறித்த நகர சபை உறுப்பினருக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment