நாட்டில் 90 லட்சம் பேருக்கு இரு தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல.
இதேவேளை அரச தகவலின் அடிப்படையில் 12 மில்லியன் பேருக்கு முதலாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் தற்சமயம், தொற்றாளர் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்படும் அதேவேளை தற்சமயம் 63844 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமையும் அதில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment