இன்றைய தினம் இலங்கையின் கொரோனா மரண பட்டியலில் புதிதாக 72 மரணங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மொத்த எண்ணிக்கை 12,448 ஆக உயர்ந்துள்ளது. எனினும், இரு வாரங்களுக்கு முன்பாக தினசரி 150க்கு மேற்பட்ட மரணங்கள் பதிவாகி வந்த நிலையில் தற்போது மரண எண்ணிக்கை வீழ்ச்சி கண்டுள்ளது.
டெல்டா தாக்கம் குறைந்துள்ள போதிலும், ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் மீண்டும் பெருந்தொற்றின் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment