விமல் கூட்டணி அடம்; பசில் எதிர்ப்பு - sonakar.com

Post Top Ad

Friday 24 September 2021

விமல் கூட்டணி அடம்; பசில் எதிர்ப்பு

 


கெரவலபிட்டிய, யுகதனவி மின் உற்பத்தி மையத்தின் இயற்கை எரிவாயு தயாரிப்பு பகுதியை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதற்கான முடிவை எதிர்த்து வரும் விமல் வீரவன்ச கூட்டணிக்கும் பசில் தரப்புக்குமிடையில் நேற்றைய தினம் பிரதமர் தலைமையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.


இப்பேச்சுவார்த்தையின் போது, இதனூடாக 250 மில்லியன் டொலர் வருவாய் கிடைப்பதோடு மின் கட்டணத்தைக் குறைப்பதற்கான வழியும் பிறக்கும் என பசில் ராஜபக்ச விளக்கமளித்துள்ளார்.


எனினும், விமல் கூட்டணி இதற்கு உடன்படாத நிலையில் ஜனாதிபதி நாடு திரும்பியதும் மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment