வியட்னாமுக்கு ஏற்றுமதியாகும் கார்ட்போர்ட் சவப்பெட்டி! - sonakar.com

Post Top Ad

Thursday, 23 September 2021

வியட்னாமுக்கு ஏற்றுமதியாகும் கார்ட்போர்ட் சவப்பெட்டி!

 


இலங்கையில் கொரோனா மரணங்கள் அதிகரித்திருந்த நிலையில், மக்களின் நெருக்கடியை சமாளிக்க அறிமுகம் செய்யப்பட்டிருந்த கார்ட்போர்ட் சவப்பெட்டிகள் வியட்னாமுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.


இலங்கையில் உள்ள வியட்னாம் தூதரகம் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பயனாக இதுவரை 1200 கார்ட்போர்ட் சவப்பெட்டிகள் இவ்வாறு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


கார்ட்போர்ட் சவப்பெட்டிகளின் அறிமுகத்தினூடாக சவப்பெட்டிகளுக்கான செலவு வெகுவாக குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment