சம்பிக்கவிடம் 'ஊழல்' விசாரணை - sonakar.com

Post Top Ad

Friday, 24 September 2021

சம்பிக்கவிடம் 'ஊழல்' விசாரணை

 சம்பிக்க ரணவக்க அமைச்சராக பதவி வகித்த காலத்தில், அவரது அமைச்சில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் பற்றி சம்பிக்கவிடம் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் மெகாபொலிஸ் அமைச்சில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக சம்பிக்க விசாரிக்கப்படுவதாக பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.


வாகன விபத்து விவகாரத்தில் சம்பிக்க ரணவக்க முன்னர் கைது செய்யப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment