குவைத்திடம் 'தொழில்' வாய்ப்பை அதிகரிக்கக் கேட்ட ஜனாதிபதி - sonakar.com

Post Top Ad

Tuesday, 21 September 2021

குவைத்திடம் 'தொழில்' வாய்ப்பை அதிகரிக்கக் கேட்ட ஜனாதிபதி

 


ஐ.நா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள நியுயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச, அங்கு  குவைத் பிரதமர் ஷேக் ஷபா அல் ஹமதை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.


இதன் போது, குவைத்தில் ஏலவே பெருமளவு இலங்கையருக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருப்பதற்கு நன்றி தெரிவித்த அவர், மேலும் வாய்ப்புகளை அதிகரித்துத் தருமாறு வினயமாக வேண்டிக் கொண்டுள்ளார்.


ஜி.எல்.பீரிஸ், லலித் வீரதுங்க உட்பட்ட பிரமுகர்களும் இச்சந்திப்பில் கலந்து கொண்டுள்ளதோடு இலங்கையில் முதலிட வருமாறும் குவைத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment