500 மில்லியன் கடனை இந்தியாவிடம் கேட்கும் அரசு - sonakar.com

Post Top Ad

Friday 24 September 2021

500 மில்லியன் கடனை இந்தியாவிடம் கேட்கும் அரசு

 


பெற்றோலிய கூட்டுதாபனத்தின் தேவை நிமித்தம் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் கேட்டு அமீரகம், ஈரான் உட்பட பல நாடுகளை நாடிய இலங்கை தற்போது அக்கடனை இந்தியாவிடம் கேட்டுள்ளது.


எரிபொருளையாவது கடனுக்குப் பெற்று, தாமதமாக மீளச் செலுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக ஜனாதிபதி செயலாளர் பி.பி. ஜயசுந்தர தெரிவிக்கிறார்.


இதேவேளை, மன்னாரில் எண்ணை வளம் இருப்பதாகவும் அதனைத் தோண்டியெடுத்து நாட்டின் ஒட்டு மொத்த கடனை அடைக்கப் போவதாகவும் பெற்றோலிய அமைச்சர் கம்மன்பில தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment