நீதிபதி ஒருவரின் வீட்டில் இரவு காவல் பணியில் இருந்த பொலிஸ் அதிகாரியொருவர் மது அருந்தி விட்டு குடி போதையில் தகாத முறையில் நடந்து கொண்டதன் பின்னணியில் அம்பலங்கொட பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் மது அருந்தியிருப்பது வைத்தியசாலையில் மேற்கொண்ட பரிசோதனை ஊடாக உறுதி செய்யப்பட்டதாக பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.
பலபிட்டிய மஜிஸ்திரேட்டின் வீட்டில் பணி புரிந்து வந்த அம்பலங்கொட பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment