தடுப்பூசி வழங்கும் இடங்களில் ஆளுங்கட்சி நபர்கள் உட்புகுந்து அடாவடி புரிந்து வருவதாக பரவலாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
மொரட்டுவ மேயரைத் தொடர்ந்து இச்சம்பவங்கள் பல இடங்களில் இடம்பெற்றுள்ளன. இத்தொடர்ச்சியில் தம்புல்ல பகுதியில் தடுப்பூசி வழங்கப்பட்ட இடமொன்றில் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இருந்தது தொடர்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் கேள்வியெழுப்பி பதிவிட்ட இளைஞன் மீது தாக்குதல் நடாத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தம்புல்ல பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் குறித்த இளைஞன் முறையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment