முகக் கவசத்தை எப்போதும் அணியுங்கள்: பந்துல அறிவுரை - sonakar.com

Post Top Ad

Saturday 28 August 2021

முகக் கவசத்தை எப்போதும் அணியுங்கள்: பந்துல அறிவுரை

 


எப்போதுமே தவறாது முகக்கவசம் அணிந்து வந்த போதிலும் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது ஒரு சந்தர்ப்பத்தில் அதனைக் கழற்றி அலட்சியமாக இருந்ததனால் என தன்நிலை விளக்கமளித்துள்ளார் பந்துல குணவர்தன.


கொரோனா தொற்றுள்ளமையை அறியாத தனது சாரதி வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்த அந்த வேளையில் தான் வாகனத்துக்குள் வைத்து முகக் கவசத்தை கழற்றியதனாலேயே தனக்கு தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், மக்கள் இது தொடர்பில் அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் பந்துல வேண்டிக் கொண்டுள்ளார்.


தான் மிகவும் பாதுகாப்பான முகக்கவசத்தை அணிந்து வந்ததனாலேயே தாக்குப் பிடித்ததாகவம் எந்த சந்தர்ப்பத்திலும் பொது இடங்களில் முகக் கவசமின்றி செல்ல வேண்டாம் எனவும் பந்துல அறிவுரை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment