பல மாவட்டங்களில் 'டெல்டா' பரவல் - sonakar.com

Post Top Ad

Saturday 7 August 2021

பல மாவட்டங்களில் 'டெல்டா' பரவல்

 


டெல்டா வகை கொரோனா வைரஸ் தொற்று பல மாவட்டங்களுக்கு பரவியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


மேல் மாகாணமே தற்சமயம் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ள போதிலும் காலி, மாத்தறை, ரத்னபுரி, கண்டி, அம்பாறை, குருநாகல், வவுனியா, யாழ் மாவட்டங்களிலும் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.


அரச தகவல் அடிப்படையில் இதுவரை 124 பேரே டெல்டா - கொரோனா தொற்றுக்குள்ளாகி கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் இது ஆகக்குறைந்த அளவான எண்ணிக்கையென சுகாதார அமைச்சின் பேச்சாளர் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment