'பொட்ட' நௌபருக்கு கொரோனா தொற்று - sonakar.com

Post Top Ad

Saturday, 21 August 2021

'பொட்ட' நௌபருக்கு கொரோனா தொற்று

 


உயர் பாதுகாப்புடன் கூடிய பூசா முகாமில் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் பொட்ட நௌபர் என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக பேர்வழி கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் சிறைச்சாலை ஆணையாளர்.


சிறுநீரக சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருந்த வேளையில் நடாத்தப்பட்ட பரிசோதனையில் குறித்த நபர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னணியில் வெலிகடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


நீதிபதியொருவரின் கொலைச் சம்பவத்தின் பின்னணியில் குறித்த நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment