கட்டாய சம்பள 'வெட்டு' இல்லை: பந்துல - sonakar.com

Post Top Ad

Saturday, 21 August 2021

கட்டாய சம்பள 'வெட்டு' இல்லை: பந்துல

 


நாடளாவிய லொக்டவுன் அமுலுக்கு வந்துள்ள நிலையில் அரச ஊழியர்களின் ஊதியத்தில் ஒரு பங்கினை கொரோனா முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கு பெற்றுக் கொள்ள வேண்டும் என பல முனைகளிலிருந்து அழுத்தம் வெளியிடப்பட்டு வருகிறது.


அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தில் 75 வீதத்தினை இவ்வாறு (கட்டாயமாக) எடுக்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஜனாதிபதிக்கு பரிந்துரைக் கடிதமும் அனுப்பி வைத்துள்ளார்.


எனினும், அவ்வாறான தீர்மானம் எதுவும் இதுவரை இல்லையென விளக்கமளித்துள்ளார் பந்துல குணவர்தன.

No comments:

Post a Comment