ஆப்கனிஸ்தான் நிலவரத்தை 'கண்காணிக்கிறோம்' : அரசு - sonakar.com

Post Top Ad

Saturday, 21 August 2021

ஆப்கனிஸ்தான் நிலவரத்தை 'கண்காணிக்கிறோம்' : அரசு

 


ஆப்கனிஸ்தானில் தலிபான் அமைப்பினர் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில் அங்குள்ள நிலவரத்தை இலங்கை அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவிக்கிறார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ்.


அங்குள்ள இலங்கையரை பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்து வருவதற்குரிய நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாகவும் இதனடிப்படையில் அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிடம் உதவி கோரியுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.


வெளிநாட்டவர்க்கு எதுவித பாதிப்பும் வராது என தலிபான் வழங்கியிருக்கும் வாக்குறுதி திருப்தியளிப்பதாகவும் அமைச்சர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment