தாமதிக்கும் 'ஈஸ்டர்' நீதி: கருப்புக் கொடி போராட்டம் - sonakar.com

Post Top Ad

Saturday 21 August 2021

தாமதிக்கும் 'ஈஸ்டர்' நீதி: கருப்புக் கொடி போராட்டம்ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தின் பின்னணியில் தமக்குக் கிடைக்க வேண்டிய நீதி தொடர்ந்தும் தாமதிக்கப்பட்டு வருவதாக தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வரும் கத்தோலிக்க தலைமைகள் இன்று அனைத்து மக்களையும் கருப்புக் கொடியைப் பறக்க விட வேண்டுகோள் விடுத்துள்ளது.


தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளில் திருப்தியில்லையெனவும் சர்வதேச சமூகத்தின் தலையீட்டைக் கோரப் போவதாகவும் தொடர்ச்சியாக விசனம் வெளியிடப்பட்டு வருகிறது.


இதேவேளை, அரசாங்கம் நூற்றுக் கணக்கானோரைத் தொடர்ந்தும் தடுத்து வைத்துள்ளதுடன் ஐவருக்கு எதிராகவே இதுவரை வழக்குத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment