குர்ரம் ஷெய்க் கொலையாளிக்கு 20 வருட சிறை! - sonakar.com

Post Top Ad

Friday 20 August 2021

குர்ரம் ஷெய்க் கொலையாளிக்கு 20 வருட சிறை!

 


பிரித்தானியாவைச் சேர்ந்த தொண்டு நிறுவன ஊழியர் குர்ரம் ஷெய்க் கொலைச் சம்பவத்தின் பின்னணியில் முன்னாள் தங்கல்ல பிரதேச சபை தலைவருக்கு 2014ம் ஆண்டிலிருந்து 20 வருட கடூழிய சிறைத்தண்டனையை அறிவித்துள்ளது கொழும்பு உயர் நீதிமன்றம்.


சுற்றுலாப் பயணியாக இலங்கை வந்திருந்த தருணத்தில் முன்னாள் பிரதேச சபை தலைவர் சந்ரா புஷ்பவிதான பதிரன மற்றும் அவரது சகாக்களினால் குர்ரம் ஷேக் ஷெய்க் கொலை செய்யப்பட்டிருந்த விவகாரம் நீண்ட நாட்கள் இழுபறிக்குள்ளாகியிருந்த நிலையில் மேன்முறையீட்டின் பின்னணியில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.தண்டனைக் காலத்தில் ஏலவே 7 வருடங்கள் கழிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment