ஒரு வீட்டிலிருந்து ஒருவருக்கு மாத்திரமே 'அனுமதி': இ.தளபதி - sonakar.com

Post Top Ad

Thursday 19 August 2021

ஒரு வீட்டிலிருந்து ஒருவருக்கு மாத்திரமே 'அனுமதி': இ.தளபதி

 


கொரோனா தீவிரத்தைக் கட்டுப்படுத்தும் பின்னணியில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளின் அடிப்படையில் தினசரி அத்தியாவசிய தேவைகளுக்காக ஒரு வீட்டிலிருந்து ஒருவருக்கு மாத்திரமே வெளியே சென்று வர அனுமதியுள்ளதாக விளக்கமளித்துள்ளார் இராணுவ தளபதி.


இப்புதிய ஒழுங்கு ஓகஸ்ட் 31 வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தற்சமயம் 46,397 பேர் சிகிச்சை பெற்று வருகின்ற அதேவேளை ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment