நாட்டை மூடுங்கள்: பங்காளி கட்சிகள் அழுத்தம்! - sonakar.com

Post Top Ad

Thursday 19 August 2021

நாட்டை மூடுங்கள்: பங்காளி கட்சிகள் அழுத்தம்!

 


ஆகக்குறைந்தது மூன்று வாரங்களுக்கு நாட்டை மூடுமாறு அரசின் பங்காளிக் கட்சிகள் இணைந்து எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளன.


இதேவேளை, ஊரடங்கை அமுலுக்குக் கொண்டுவருமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரத்யேகமாக வேண்டுகோள் விடுத்துள்ளது. ஏலவே அனைத்து கட்சித் தலைவர்கள் சந்திப்பை நடாத்தி கொரோனா சூழ்நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கையெடுக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.


எனினும், நாட்டை மூடுவதன் ஊடாக பொருளாதாரம் முடங்கி விடும் என ஜனாதிபதி தயக்கம் காட்டி வருகின்றமையும் தினசரி தொற்றாளர் மற்றும் மரண எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment