வீதியில் வீழ்ந்த நபர் மரணம்; கொரோனா தொற்று! - sonakar.com

Post Top Ad

Sunday 1 August 2021

வீதியில் வீழ்ந்த நபர் மரணம்; கொரோனா தொற்று!

 


யாழ்ப்பாணம், உரும்பிராயைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்றைய தினம் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென சரிந்து வீழ்ந்துள்ளார்.


யாழ் போதனா வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டிருந்த நபர் அதிகாலை உயிரிழந்துள்ளதுடன் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


63 வயது நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ள அதேவேளை, யாழ் போதனா வைத்தியசாலையில் உறவினர் ஒருவரை பார்த்து விட்டுத் திரும்பிய நிலையிலேயே இவ்வாறு வீதியோரம் வீழ்ந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment