9 ஆயிரத்துக்கு அதிகமானோருக்கு வீடுகளிலேயே சிகிச்சை - sonakar.com

Post Top Ad

Monday 23 August 2021

9 ஆயிரத்துக்கு அதிகமானோருக்கு வீடுகளிலேயே சிகிச்சை

 


இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலைகளில் இட மற்றும் வசதிப் பற்றாக்குறையும் நிலவுகிறது.


இந்நிலையில், தற்சமயம் 9,606 பேர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.


இன்றைய தினம் இதுவரை 3,223 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை, மொத்தமாக 41,476 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment