மகாராஜாவின் இழப்பு: NUA அனுதாபம்! - sonakar.com

Post Top Ad

Sunday 25 July 2021

மகாராஜாவின் இழப்பு: NUA அனுதாபம்!

 


ஷக்தி - சிரச ஊடக நிறுவனங்களின் அதிபர் ஆர். ராஜமகேந்திரனின் மறைவு ஈடு செய்ய முடியாதது எனவும் ஆழ்ந்த கவலையளிப்பதாகவும் தெரிவிக்கிறது அசாத் சாலியின் தேசிய ஐக்கிய முன்னணி.


1983 வன்முறையில் முற்றாக நிர்மூலமாக்கப்பட்டிருந்த நிலையிலும் மீண்டும் தமது முயற்சியால் உயர்ந்த மகாராஜாவும் அவரது தொழிற்துறையும் ஏனையோருக்கும் எடுத்துக்காட்டு மாத்திரமன்றி, ஆட்சியாளர்களுக்கு அடி பணியாத காரணத்தினால் ஏற்பட்ட அனைத்து சவால்களுக்கும் தனது இறுதி நாள் வரை தைரியமாக முகங்கொடுத்து நின்றவர் எனவும் கட்சித் தலைவர் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு ஆட்சியாளர்களின் ஊடக அடக்குமுறைக்கும் எதிராக துணிந்து நின்று செயற்பட்ட ஒரு ஜாம்பவானின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என தேசிய ஐக்கிய முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment