கொரோனா நான்காவது அலையைத் தவிர்ப்பது முழுக்கவும் நிர்வாகிகளின் கையிலேயே இருப்பதாக தெரிவிக்கிறார் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஹேமந்த ஹேரத்.
தற்போது டெல்டா அபாயம் தொடர்பில் பேசப்பட்டு வருகின்ற போதிலும் டெல்டா ஊடாகவோ இல்லையோ, கொரோனா தொற்று பரவலைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை திட்டமிட்டு செயற்படுத்தாவிட்டால் நான்காவது அலை உருவாவதைத் தவிர்க்க இயலாது என அவர் மேலும் தெரிவிக்கிறார்.
அண்மைய தினங்களாக நாட்டின் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ள அதேவேளை தற்போது பி.சி.ஆர் பரிசோதனைகளை அரசாங்கம் குறைத்துள்ளதாக குற்றச்சாட்டுகளும் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment