மரண விசாரணையை தடுக்க முயற்சியென குற்றச்சாட்டு - sonakar.com

Post Top Ad

Thursday 22 July 2021

மரண விசாரணையை தடுக்க முயற்சியென குற்றச்சாட்டு

 


ரிசாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் மரணத்தின் பின்னணியிலான விசாரணைகளை தடுக்க முயற்சிகள் இடம்பெறுவதாக குற்றச்சாட்டு வெளியிட்டுள்ளது ஐக்கிய மனித உரிமைகள் அமைப்பு.


இவ்விவகாரத்தில் சிறுமிக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்காக தமது அமைப்பு பெருமளவு முயற்சிகளை செய்து, உறவினர்களோடும் குறித்த சிறுமியை அழைத்துச் சென்ற முகவரான பொன்னையாவுடனும் நீண்ட உரையாடல்களை மேற்கொண்டுள்ளதாகவும் சிறுமி 16 வயதுக்கு முன்னதாகவே பணியிலமர்த்தப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார் அவ்வமைப்பின் இயக்குனர் பிரணிதா வர்ணகுலசூரிய.


இதேவேளை, ரிசாதின் வீட்டில் இடம்பெற்ற இவ்விவகாரம் தொடர்பில் எதிர்க்கட்சியும் மௌனம் காப்பதாகவும் அரசியல் ரீதியாக இவ்விவகாரத்தை முடக்குவதற்கு முயற்சிகள் இடம்பெறுவதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment