நிதியமைச்சராக பதவியேற்றுள்ள பசில் ராஜபக்ச, நாட்டின் அனைத்து நிதி விடயங்களிலும் முழுக் கட்டுப்பாட்டைத் தம் வசம் பெற்றுள்ளார்.
வங்கி, முதலீடு, அரச வருவாய், திறைசேரி, அனைத்து வகை பொது நிதி முகாமைத்துவத்துக்கான திணைக்களங்களும் பசில் ராஜபக்சவின் கீழ் இயங்கவுள்ளன. இதற்கேதுவாக மஹிந்த ராஜபக்ச வழி விட்டு அகன்றுள்ள அதேவேளை அனைத்து அமைச்சு விவகாரங்களிலும் பசிலின் தலையீடு இருக்கும் என்றும் ஆளுந்தரப்பிலிருந்து கவலை வெளியிடப்பட்டுள்ளது.
வழக்கத்துக்கு மாறாக, வர்த்தமானியில் நாடாளுமன்ற உறுப்பினராக அறிவிக்கப்பட்ட பின்னர் முதலில் அமைச்சராகப் பொறுப்பேற்ற பசில் அதன் பின்னரே நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment