சிறுமி விவகாரத்தில் ரிசாதையும் கைது செய்ய முஸ்தீபு - sonakar.com

Post Top Ad

Tuesday 27 July 2021

சிறுமி விவகாரத்தில் ரிசாதையும் கைது செய்ய முஸ்தீபு

 


வயது குறைந்த நபரை வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைக்கமர்த்திய குற்றச்சாட்டிலும் ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஏலவே ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தின் பின்னணியில் தடுப்புக் காவலில் உள்ள ரிசாத் பதியுதீன் தற்போது மீண்டும் குற்றவியல் விசாரணைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில், சிறுமி விவகாரத்திலும் ரிசாத் பதியுதீனையும் சந்தேக நபராக இணைக்கவுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.


எனினும், குறித்த சிறுமி வீட்டில் பணியிலினையும் போது 16 வயது பூர்த்தியடைந்து விட்டதாக ரிசாத் தரப்பினர் பிரச்சாரம் செய்து வருகின்றமையும், பொலிசார் அதற்கு மாற்றமாக தகவல் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment