ஹரின் பெர்னான்டோவுக்கு CID அழைப்பு! - sonakar.com

Post Top Ad

Tuesday 27 July 2021

ஹரின் பெர்னான்டோவுக்கு CID அழைப்பு!

 


நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னான்டோவை நாளைய தினம் விசாரணைக்கு சமூகமளிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது குற்றவியல் விசாரணைப் பிரிவு.


ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தநது தந்தை எச்சரித்ததாக அக்காலப் பகுதியில் ஹரின் வெளியிட்டிருந்த தகவல் தொடர்பிலேயே அவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், இவ்விவகாரம் தொடர்பில் ஏலவே ஜனாதிபதி ஆணைக்குழு முன்னும் ஹரின் சாட்சியமளித்துள்ள நிலையில் இவ்விசாரணையில் பலனில்லையென அண்மையில் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.


எவ்வாறாயினும், ஹரின் செப்டம்பருக்கு முன்பாக கைது செய்யப்பட மாட்டார் எனும் உத்தரவாதத்தின் பின்னணியிலேயே நாளைய தினம் அவர் விசாரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment