நாட்டை அபிவிருத்தி செய்வதற்குத் தான் வைத்திருக்கும் திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற தனக்கு மேலும் எட்டு வருடங்கள் கால அவகாசம் இருப்பதாக தெரிவிக்கிறார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.
ஊடக நிறுவனங்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் வைத்தே இவ்வாறு தெரிவித்த ஜனாதிபதி 2019ல் கிடைத்த அதிகாரம் நிறைவுற இன்னும் மூன்று வருடங்கள் இருப்பதாகவும் அதற்கு மேலதிகமாக ஐந்து வருடங்கள் தனக்குக் கிடைக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, அண்மையில் அமைச்சரவையில் சில மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றமையும் தற்சமயம் ராஜபக்ச குடும்பத்தினரின் ஆளுமை அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment