ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தின் பின்னணியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னான்டோவை விசாரிப்பதும் கைது செய்ய முனைவதும் கேலிக் கூத்தான விடயம் என தெரிவிக்கிறார் ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க.
தாக்குதல் இடம்பெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவும் இந்தியா உளவுத்துறையிடமிருந்து எச்சரிக்கை கிடைக்கப் பெற்றும் உரியவர்கள் நடவடிக்கையெடுக்கத் தவறியுள்ள நிலையில் குடும்பத்தவர்கள் ஹரினை எச்சரித்த விவகாரத்தின் பின்னணியில் அவரை விசாரிக்க முனைவது கேலிக்கூத்து என இன்று நாடாளுமன்றில் ரணில் தெரிவித்தார்.
சர்வதேச உளவு கிடைத்தும் கடமையை சரியாக செய்ய முடியாதவர்கள் ஹரின் சொல்லியிருந்தால் தாக்குதலைத் தடுத்திருக்கப் போவதுமில்லை. இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமையை மீறி அவரை விசாரிக்கவும் கைது செய்யவும் முனைவதால் எவ்வித பிரயோசனமுமில்லையென ரணில் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment